
அடைமழையின் அமைதி ; பெருமழையின் ஆக்ரோஷம்
அடிமனத்தின் ஆழத்தில் ; ஆனந்தத்தின் ஆக்கிரமிப்பு
பள்ளிப்பருவத்தில் ; பத்து வயதுச் சிறுவனய்
துள்ளி வீடு வருகையில் ; சில்லிடும் மழைத்துளிகள்
சிரம் நனைந்து முகம்வழிய ; எங்குமில்லா சந்தோசம்
தண்ணீரில் குதித்தாடி ; கண்ணீரின் சுவடின்றி............
முந்தானை கொண்டு ; முகம் துடைத்த அம்மாவின்
அடிவயிற்றில் முகம் அழுத்தி அணைத்த சுகம்..........
இரவுகளில் உறங்கையிலே ; இதமாக அவள் சேலை
முகத்தோடு மோதவிட்டு ; நித்திரைக்கு சென்றதுண்டு.
நேற்றைய மழையில்
முற்றிலும் நான் நனைந்து
வீட்டினுள் நுழைந்தேன்
அம்மாவின் ஏக்கம்......
அடிமனதில் துக்கம்......!!!
அவள் சுவாசம் நின்றபோதும்
அவள் வாசம் என்னுள் வாழும்.....!!!

No comments:
Post a Comment