Friday, April 9, 2010

அம்மாவின் வாசம்



அடைமழையின் அமைதி ; பெருமழையின் ஆக்ரோஷம்
அடிமனத்தின் ஆழத்தில் ; ஆனந்தத்தின் ஆக்கிரமிப்பு
பள்ளிப்பருவத்தில் ; பத்து வயதுச் சிறுவனய்
துள்ளி வீடு வருகையில் ; சில்லிடும் மழைத்துளிகள்
சிரம் நனைந்து முகம்வழிய ; எங்குமில்லா சந்தோசம்
தண்ணீரில் குதித்தாடி ; கண்ணீரின் சுவடின்றி............
முந்தானை கொண்டு ; முகம் துடைத்த அம்மாவின்
அடிவயிற்றில் முகம் அழுத்தி அணைத்த சுகம்..........
இரவுகளில் உறங்கையிலே ; இதமாக அவள் சேலை
முகத்தோடு மோதவிட்டு ; நித்திரைக்கு சென்றதுண்டு.

நேற்றைய மழையில்
முற்றிலும் நான் நனைந்து
வீட்டினுள் நுழைந்தேன்
அம்மாவின் ஏக்கம்......
அடிமனதில் துக்கம்......!!!

அவள் சுவாசம் நின்றபோதும்
அவள் வாசம் என்னுள் வாழும்.....!!!

மூன்று எழுத்தில் உள்ள மூச்சு

இயற்கை அன்னை பெற்றெடுத்த இந்த உலகில் ''உயிர்'' என்ற மூன்று எழுத்தோடு
''உறவு'' என்ற பிணைப்பில் ''உடல்'' என்ற மூன்றெழுத்தில் உருவாகும் ஒரு குழந்தை
''அம்மா'' ''அப்பா'' என்று ''மழலை'' பேசுவதும் மூன்று எழுத்தில்தான்.

''ஐந்து'' வயதானதும் ''கல்வி'' என்ற மூன்று எழுத்தை ''கற்று'' , ''அறிவு'' என்ற மூன்றெழுத்தில் தேர்ச்சி அடைகின்றான்.

வாலிபப்பருவம் வந்ததும் ''இளமை'' என்ற மூன்று எழுத்தில் ''திறமை'' என்ற மூன்றெழுத்தை தேடி ''பணம்'' என்ற மூன்று எழுத்தை நாடி ''சுகம்'' என்ற மூன்று எழுத்தை அடைகின்றான்.

காளைப்பருவம் வந்ததும் ''காதல்'' என்ற மூன்று எழுத்துக்கு உயிர் கொடுக்க ''மனைவி'' என்ற மூன்றெழுத்தை அனுபவிக்கிறான்.பின்னர் ''பிள்ளை'' என்ற மூன்றெழுத்து இற்கும் ''அம்மா'' , ''அப்பா'' என்ற மூன்று எழுத்தால் அதிபதி ஆகின்றான்.''கவலை'' என்ற மூன்று எழுத்தையும் கற்கிறான்.

காலம் வந்ததும் ''வயது'' என்ற மூன்று எழுத்து அதிகரித்து ''முதுமை'' என்ற மூன்று எழுத்து மூப்படைந்து முடிவில் ''உயிர்'' என்ற மூன்று எழுத்து ''உடல்'' என்ற மூன்று எழுத்தை விட்டுப்பிரிந்து ''பிணம்'' என்ற மூன்று எழுத்தாகி ''சுடலை'' என்ற மூன்று எழுத்தில் ''உரம்'' இடுகின்றான்.

உண்மைக்காதல்!!!



இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் காதலித்தன.......
ஒரு நாள் ஆண் வண்ணத்துப்பூச்சி பெண் வண்ணத்துப்பூச்சியிடம் ஒரு போட்டி வைத்தது.
"நம் இருவரில் யார் நாளை காலை முதலில் வந்து இப்பூவில் அமர்கிறோமோ அவர் தான் நம்மிருவரில் அதிகம் காதலிப்பவர்" என்றது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து வந்த ஆண் வண்ணத்துப்பூச்சி கூம்பிக்கிடந்த பூவைத் திறந்தது.
அங்கு அது கண்ட காட்சி..........
முதல் நாள் இரவே அப்பூவில் தங்கிவிட்ட பெண் வண்ணத்துப்பூச்சி உயிரற்ற உடலாகக் கிடந்தது!!!

உண்மைக்காதல் எதுவென இப்போது தெரிந்து கொள்..................

EXAM SPECIAL கீதாசாரம்

எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை......
( ஆறேழு PAPERS ல அரியஸ்)
எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை......
(QUESTION PAPER ரொம்ப HARD)
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்காது.....
(நாம தான் படிக்கவே மாட்டோமே!)
உன்னுடையது எதை நீ இழந்தாய்?
(MARKS எல்லாம் TEACHER உடையது......அதை நாம் கேட்கக்கூடாது)
எதற்காக நீ அழுகிறாய்?
(சும்மா சீன் போடத்தானே?)

எதை நீ படித்தாய் அது மறப்பதற்கு?
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் போவதற்கு?
எந்த பிட்டை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது EXAM HALL இல் இருந்தே எடுக்கப்பட்டது
எந்த பிட்டை நீ கொடுத்தாயோ,
அதுவும் HALL இலேயே கொடுக்கப்பட்டது.
நீ FORMULA எழுதி வைத்த BENCH
இன்று உன்னுடையது,
நாளை அது மற்ற ஒருவருடையதாகும்.
மற்றொருநாள் அது வேறோருவருடையதாகும்.
இதுவே EXAM நியதி!!!

Wednesday, March 18, 2009

tamil nadu arasiyal

மனதை அதிரவைத்த.....

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,SURFEXCEL போடு கறை போயிடும்" என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்